Followers

Thursday, February 6, 2014

கடவுள் நல்லவரா அல்லது கெட்டவரா?


04.2.14

கடவுள் நல்லவரா அல்லது கெட்டவரா?





கடவுளை நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ மனிதன் எதைக் கொண்டு நியாயப்படுத்துகிறான்? இது பொதுவான கேள்வியென்றாலும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஒரு பதிலுடன் தயாராக பாயக் காத்திருப்பர். அது நிச்சயமாக அவரது வாழ்வின் அனுபவம் சார்ந்தோ அல்லது அவரது விருப்பு/வெறுப்பு மற்றும் மகிழ்ச்சி/ஏமாற்றம் சார்ந்தோ இருக்கும் என்பது நிச்சயம். சிலர் சிறுபிள்ளைத்தனமாக தனது வாழ்வில் தான் வெற்றி பெறவில்லை என்பதற்கும் மற்றும் தன் மேல் அன்பு கொண்டோர் இறப்பிற்கும் கடவுளைக் காரணம் காட்டுவர். மனிதன் ஏன் எளிமையாக சிந்திக்க மறுக்கிறான் எனப் புரியவில்லை.

நன்றாக யோசித்துப் பாருங்கள். தேர்வுக் கூடம் வரும் தகப்பன் தன் மகனுக்காக தேர்வெழுத முடியுமா? அல்லது தனது மகனது தோல்விக்கு தான் பொறுப்பாக முடியுமா? மனிதன் கொண்டுவந்த system  த்திலேயே  தகப்பன் பிள்ளைக்காக தேர்வெழுத முடியாதெனும்போது அதை ஏன் ஒரு greater scale ல் ஒப்பிட்டுப் பார்க்க மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஒவ்வொருவரும் தனது வாழ்வை தான் தான் வாழ்ந்தாக வேண்டும். அதற்கு யாரையும் பொறுப்பாக்க முடியாது.

இதையே இன்னும் சற்றுப் பெரிய அளவில் யோசித்துப் பாருங்கள்.






ஒரு 100 பேர் விளையாடுகின்ற ஒரு விளையாட்டில் அல்லது ஒரு 100 பேர் சேர்ந்து செய்கின்ற ஒரு காரியத்தில் அதற்கான விதி முறைகளையும் எது தோல்வி அல்லது எது வெற்றி என்பதை நிர்ணயம் செய்யும் வகையையும் முறைப்படுத்துபவர்கள் மனிதர்கள்தான் எனும் போது விளையாட்டில் யாரேனும் அழுகுணி ஆட்டம் ஆடினார்களென்றால் கடவுளைக் குறை சொல்ல முடியுமா? மனிதனின் தவறை கடவுளுடையதாக்க முடியுமா?

இதையே இன்னமும் பெரிய அளவில் பார்க்கும் போது 100 பேர் அல்லாது கூடி வாழும் ஒரு பெரிய சமுதாயம் எனக்கொள்ளுங்கள். இங்கேயும் மேலே சொன்னதைப்  போலவேதான். வாழும் முறையையும் வாழும் வழிகளையும் ஏற்படுத்திக் கொண்டவன் மனிதன்தான். பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் மனிதன் தன் சுயநலத்திற்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே தவிர கடவுளை இவைகளுக்கு காரண கர்த்தாவாக்குவது சரியெனத் தோன்றவில்லை.மதங்களும், மடங்களும் மத குருமார்கள் கட்டுப்பாட்டில் ஆனால் கடவுள் யாருடைய கட்டுப்பாட்டிலும் கிடையாது.

கூடி வாழ்வதும் கேடாய் வாழ்வதும் மனிதனின் கையில்.

எல்லாவற்றிற்கும் மேல், தவறு மனிதனுடையது என்று அவன் ஒத்துக் கொள்ளாத வரையில் அந்தத் தவறுகள் திருத்தப் படப் போவதில்லை.

சமுதாய பேதங்களுக்கும் சாதி மத பேதங்களுக்கும் கடவுளைக் குற்றம் சாட்டுவோர் இதே தவறைத்தான் செய்கின்றனர். இது மட்டுமல்ல மனிதன் குறையோடு பிறப்பதையும் கடவுள் செயல் என்கின்றனர். நன்றாய் கவனித்தால் இந்தக் குறைபாடுகளுக்கு மனிதன் சொல்லும் ‘developmental activities’ எனும் industrialization மற்றும் தன் இணைத் தேர்வும் தான் காரணமே தவிர கடவுளல்ல.

கடவுள் மாசு மறுவற்ற உலகத்தைப் படைத்து நம் கையில் கொடுத்தார். அதுவும் maintenance free system படைத்துக் கொடுத்தார். நாம் தான் அதைக் கெடுத்து விட்டோம்.

உண்மையிலேயே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளை அவரது படைப்பைக் கொண்டல்லாது நமது குறுகிய சிந்தனைகளையும் அனுபவங்களையும் வைத்து நல்லவரா அல்லது கெட்டவரா என நிர்ணயிப்பது கடினம் மட்டுமல்ல அது நியாயமான செயலுமல்ல.

இதுவல்லாது சில தத்துவ ஞானிகள் கடவுளை இந்த உலகத்தின் நிகழ்வுகளை வைத்து நியாயம் தீர்க்கின்றனர்.

தத்துவ ஞானிகளில் ஒரு சாரர் கடவுள் யாரையும் சமமாக படைக்கவில்லை என்றும், சமுதாயத்திலும், பிறப்பு மற்றும் அதன் பின்புலங்களிலும் பெரும் ஏற்றத் தாழ்வு காணப்படுவதால் கடவுள் ஒரு sense of justice இல்லாது ஒரு சாரருக்கு காரணமில்லாமல் பெருங்கொடுமை இழைத்து விட்டதாக பேசுகின்றனர்.

மற்றொரு சாரர் இந்த உலகத்தில் நடக்கும் இயற்கைப் பேரழிவுகளையும் மற்றும் மனிதகுலத்தை அழிக்க வல்ல பேராயுதங்களைக் கொண்டு நடக்கும் போர், அதனால் ஏற்படும் கொடுமைகள், இழப்புகள் இறப்புகள் அனைத்திற்கும் கடவுள்தான் காரணம் எனச் சொல்லுகின்றனர். இந்தக் கொடுமைகளை தடுக்கத் தவறிய கடவுள் நீதி தவறியவரே என்கின்றனர்.

 
எபிகுரஸ் (Epicurus) என்கிற கிரேக்கத் தத்துவ ஞானி, கடவுள் எல்லாம் வல்லவராயிருந்து இத்தனைக் கொடுமைகளையும் தடுக்க அவருக்கு மனமில்லாதபோது அவரை நாம் ஏன் கடவுள் எனச் சொல்ல வேண்டுமென்கிறார்.

நியாயம்தான்.

இதற்கு கடவுளைச் சொல்கிற மதங்கள் என்ன சொல்கின்றன




இந்த வகையில் கடவுளை அறிய நாம் இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அது நமது விருப்பம். அதாவது ஒரு தனி மனிதனின் விருப்பம், இச்சை எனவும் கூறலாம். இதை ஆங்கிலத்தில் FREE WILL எனச் சொல்வர். அதாவது இந்த FREE WILL கோட்பாடு, நடக்கும் நிகழ்வுகளுக்கு மனிதனின் தனிப்பட்ட தேர்வு (CHOICE), இச்சை அல்லது விருப்பம்தான் காரணம் என்கிறது.

இந்த FREE WILL கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாமே நடப்பவைகள் எல்லாமே முன்னரே நிர்ணயிக்கப் பட்ட ஒன்று. Every thing is pre determined. என்கின்றனர். இந்த pre deterministic view என்பது நாம் நினைக்கும் படியான ‘விதி’ என்பதல்ல. இது வேறு.

அதாவது எதுவும் நமது தேர்வுக்கு (CHOICE) உட்பட்டதல்ல என்பதாகும்.

எப்படியெனில் ஒரு மனிதன் பிறக்கும் போது அவனுடன் வருகின்ற DNA அதாவது ஜீன்ஸ், மற்றும் அவன் பிறக்கும் சூழல் ஆகியவைகளைப் போன்ற பெரும்பாலான காரணிகள் அவனுக்கு கிடைக்கும் CHOICE ஐ குறைத்து எல்லாவற்றையும் முன்னரே நிர்ணயித்தபடிக்கு நடப்பதைப் போல நடத்துகிறது என்பதாகும்.

நன்றாக கவனியுங்கள்.

இந்த FREE WILL கோட்பாடு நடக்கும் தவறுகளுக்கு மனிதனின் தேர்வுகள் தான் காரணம் என்கின்றது ஆனால் இந்த deterministic view வானது நடக்கும் செயல்களுக்கு உருவாக்கியவர் அல்லது உருவாக்கம் தான் காரணம் என்கின்றது.

இந்து மதம் பொதுவாக விதியை பேசுகிறது. அது நமது பாவ புண்ணியங்கள் நமது விதியை நிர்ணயிக்கின்றன என்கிறது. அதாவது போன ஜன்ம பாவ புண்ணியம் இந்த பிறப்பையும் இந்த ஜன்ம பாப புண்ணியங்கள் எதிர்கால பிறப்பையும் நிர்ணயிக்கின்றன என்கிறது. ஆனாலும் விவேகானந்தர் விதியை மறுக்கவில்லையென்றாலும் மனிதனின் செயல்கள் அவனது வாழ்வை நிர்ணயிக்கிறது என்கிறார். விதி ஒரு greater environment என்றால் செயல்கள் another environment within the greater environment எனும்படி சொல்கிறார்.

புத்த மதம் கர்மாதான் ஒருவனை வழி நடத்துகிறது என்கிறது. அதுவே அவனது CHOICE க்கு காரணமாகிறது என்கிறது.

இசுலாமிய மதமோ, கடவுள் மனிதனைப் படைத்து அவனுக்கு நல்லதையும் கெட்டதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுத்தார் என்கிறது. இந்தப் படியான தேர்வே அவனது வாழ்வை நிச்சயிக்கிறதென்கிறது.

கிருத்துவ மதமும் இதையே சொல்கிறது. அது இன்னமும் ஒருபடி மேலே போய் தன் விருப்பத்தால், சாத்தானின் தூண்டுதலால் , தவறிழைத்த மனிதனை தன் பிள்ளையை பலி கொடுத்து அவனது பாவங்களிலிருந்து கடவுள் மீட்டெடுத்தார் என்கின்றது.

இப்போது நாம் மனிதனைப் பார்ப்போம்.

மனிதனின் செயல்களுக்கு மனிதன் பொறுப்பெடுக்காமற் போனால் அதுவே ஒரு பொறுப்பற்ற செயல்.

இந்த சிக்கலான விடயத்தை நாம் மிகவும் எளிமையாக பார்க்க முயற்சிப்போம்.



மனிதனின் CHOICE க்கு என்னதான் gene tendency என்றோ அல்லது environmental motivation என்று சொன்னாலும் அங்கு அவனுடைய lack of will ம் இருக்கிறதென்பதை மறுக்க முடியாது.

இயற்கைப் பேரழிவுகளுக்கு இயற்கை காரணமல்ல. Anthropological activities எனப் படும் மனிதனின் செயல்களே இவைகளுக்குக் காரணம். Earth quake, global warming, environmental poisoning, degradation, species extinction என வரிசைப்படுத்திச்  சொல்லிக் கொண்டே போகலாம்.

கேன்சரோ அல்லது குறையாய்ப் பிறக்கும் குழந்தைகளோ, மனிதனின் வாழ்வு முறைகளாலேயே மனிதனின் இயற்கைச்  சூழல் கேடு  காரணமாகவே வருகிறது.

கடவுள் ஒருவரே என்று ஒப்புக் கொள்ள மறுப்பதிலிருந்து  எல்லாவகைகளிலும் மனிதன் வேறு பட்டு நிற்கவே முயற்சிக்கிறான். இங்கு அவனது FREE WILL வேலை செய்கிறது. அதிலும் தனியாக அல்லாமல் குழு சேர்ந்து நிற்கிறான். ஒரு குழு இன்னொன்றை அடக்க முற்படுகிறது அல்லது தனது கருத்தை/முடிவுகளை திணிக்க முற்படுகிறது. எனவே முரண்படுதல் (conflict) இயற்கையாகிறது. இத்துனை ஏன். கடவுளை வைத்து ஒரு சாரரும் கடவுளை மறுத்து மறு சாரரும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் உண்மை எதுவென்று சிந்திக்க மறுக்கின்றனர். எனவே முரண்படுதல் தவிற்க இயலாததாகிறது.



இது மட்டுமல்ல, யூதர்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஹிட்லரைத்தான் இரண்டாம் உலகப் போருக்கும் HOLOCAUST க்கும் காரணம் காட்ட வேண்டுமே தவிர கடவுளை அல்ல. இதையே இப்போதைய ஈழ நிகழ்வுகளுக்கும் சொல்லலாம்.

ஆனால் மகாத்மாவின் தேர்வு அஹிம்சை எனும் நிச்சயமான வெற்றி கொண்ட ஒரு புதிய போர் முறையையே மனித குலத்திற்கு தந்தது.
மேற்சொன்னவைகள் ஒரு தனி நபரின் தேர்வாக அனவருக்கும் அமையவில்லையென்றாலும் ஒரு தலைவனது தவறான முடிவுகளும் அவனின் தவறான தேர்வுகளும் (Decisions/Choices) அவனைச் சார்ந்த சமுதாயத்தை பாதிக்கிறது என்பதற்கு சரியான உதாரணங்கள்.

பைபிளைப் பாருங்கள். பாராஸ் மோசசுடன் அவரது ஜனங்களை அனுப்பமாட்டேன் என முடிவெடுத்ததனால் அவனுடய மக்களும் வேதனைப் பட்டனரல்லவா? இது ஒரு தலைவனுடைய தவறான தேர்வு / முடிவு  அவனது சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதற்கு உதாரணம். மகாபாரதத்தில் துரியோதனனும் ராமாயனத்தில் இராவணனும் போருக்கும் பேரழிவுக்கும் காரணமாகிறார்கள்.
சித்தார்த்தர் தனது தேர்வால் ஞானத்தைப் பெற்றார்.




கடவுளை மறுப்பதென்பது, பத்து பிள்ளைகளுக்கு பொறுப்பாய் சொத்து சேர்த்து வைத்த தகப்பனை,  பிள்ளைகள்  தங்களுக்குள் சொத்தைப் பிரிப்பதிலிருந்து அந்தச் சொத்தை வைத்துக் காப்பாற்றுவது வரை தவறிழைத்துவிட்டு தங்களுக்குள்ளும் சண்டையிட்டுக் கொண்டு டஸ்மாக் பாரில் உட்கார்ந்து தண்ணியடித்துவிட்டு தங்களது தவறுகளுக்கு தகப்பனை காரணம் காட்டி வாய்க்கு வந்தபடி திட்டுவதைப் போன்றதல்லவா?

Are’nt they ungrateful?

பிள்ளைகளுக்கு சொத்தை  சேர்த்துவைத்த தகப்பனைப்போல் இந்த பிரபஞ்சத்தை நமக்களித்த கடவுளை நாம் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பாக்கலாமா?
இவர்களைப் பார்த்து என்ன சொல்ல? பரிதாபப் படத்தான் முடியும்.

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

  

3 comments:

  1. மனிதத்தை மட்டும் பார்ப்போம்...

    நல்லதொரு அலசலுக்கு பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. @திண்டுக்கல் தனபாலன்
    தங்கள் வரவிற்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே.
    மனிதமும், அன்பும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலுமே அனைவரையும் வாழவைக்கும். உண்மைதான்.

    ReplyDelete
  3. He is reflecting mirror of your activity.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...